சச்சின், கங்குலியின் சாதனையைத் தகர்த்த கோலி: சுவாரஸ்யமான 11 தகவல்கள்
கேப் டவுன் நகரில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 34-வது சதம் அடித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பல சாதனைகளைப் படைத்துள்ளார். தென் ஆப்பிரிக்கா பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. ஒரு நாள் தொடரில் 2-0 என்று முன்னிலை வகித்துவரும் இந்திய அணி கேப் டவுன் நகரில் நேற்று நடந்த 3-வது ஒருநாள் போட்டியில் 124 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவைத் தோற்கடித்தது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 160 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். இந்தத் தொடரில் அவர் தொடர்ச்சியாக அடிக்கும் 2-வது சதமாகும். 6 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்று இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்தத் தொடரில் பல முக்கிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. அவை குறித்த பார்வை. 1. கேப் டவுனில் நடந்த 3-வது ஒருநாள் போட்டியில் கேப்டன் விராட் கோலி தனது சர்வதேச அளவில் தனது 34-வது சதத்தைப் பதிவு செய்தார். 2. இதன் மூலம் கேப்டனாக...