159 பந்துகளில் 160 நாட் அவுட்: நிறுத்த முடியாத கோலி சதம் எண் 34; இந்தியா 303 ரன்கள் குவிப்பு VIDEO

கேப்டவுனில் நடைபெறும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 160 ரன்களைக் குவித்து நாட் அவுட்டாகத் திகழ இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 303 ரன்கள் என்று தன் 50 ஓவர்களை முடித்துள்ளது.

தென் ஆப்பிரிக்க அணியினால் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட இந்திய அணியின் 303 ரன்களில் பாதிக்கும் மேல் ரன்களை விராட் கோலி எடுத்துள்ளார்.

ரோஹித் சர்மா மட்டையின் உள்விளிம்பில் பட்டு ரபாடா பந்தில் விக்கெட் கீப்பர் கிளாசன்கேட்சுக்கு வெளியேறினார் முன்னேயும் வராமல் பின்னேயும் செல்லாமல் பந்தின் லெந்த்தைப் பார்த்து ஒரே இடத்தில் தேங்கினார் ரோஹித் சர்மா ஸ்கோரரைத் தொந்தரவு செய்யாமல் வெளியேறினார்.

ஷிகர் தவண் (76), கோலி இணைந்து ஸ்கோரை 140 ரன்களுக்கு உயர்த்தினர். ஷிகர் தவணுக்கு தொடக்கத்தில் அறிமுக வீச்சாளர் லுங்கி இங்கிடி சில எளிதான பவுண்டரி பந்துகளை வீசினார் இதனால் 6 ஓவர்களில் 47 ரன்கள் என்று மோசமான அறிமுக ஒருநாள் போட்டியானது லுங்கி இங்கிடிக்கு.

கோலி சரியான பார்மில் இருப்பது அவர் வெளியே சென்ற பந்துகளை ஆடாமல் விட்டதும் எல்.பி.க்காக உள்ளே செலுத்திய பந்துகளை சிறப்பாக ஆடியதிலும் வெளிப்பட்டது, பந்துகளை அவர் அருமையாகக் கணித்த விதம் அவரது தலை சிறந்த பார்மை பறைசாற்றியது.

கோலி இறங்கியவுடன் 0-வில் இருந்த போது ரபாடா பந்துக்கு நகர்ந்து பிளிக் ஆட முயன்றார்பந்து கால்காப்பில் மட்டும் பட்டதாக முறையீடு எழ நடுவர் அவுட் கொடுத்தார், உடனேயே கோலி ரிவியூ கேட்டார். இதில் மட்டையில் பந்து பட்டது உறுதியானது அதே ஓவரில் ரபாடா ஒரு இலவச லெக் திசைப் பந்தை வீச கோலி அதனை முறையாகப் பவுண்டரிக்கு அனுப்பினார்.

அடுத்த ஓவரில் தவண் இரண்டு இங்கிடி பவுண்டரி பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பினார்கோலி ரபாடாவின் ஷார்ட் பிட்ச் பந்தை மிகத்துல்லியமாக மிட்விக்கெட் பவுண்டரிக்கு புல் செய்து பவுண்டரி அடிக்க, இங்கிடி தொடர்து இலவச பவுண்டரி பந்துகளை வீச 10 ஓவர்களில் இந்திய அணி 50/1 என்று வந்தது அடுத்த 6 ஓவர்களில் ஓவருக்கு 6 ரன்களுக்கும் மேலான விகிதத்தில் அடிக்க 16 ஓவர்கள் முடிவில் ஸ்கோர் 87/1 என்று இருந்தது.

இம்ரான் தாஹிர் வர தவண்ஸ்வீப்மற்றும்மிட்விக்கெட்பவுண்டரிகளை அடித்தார்இதில்முதல்பவுண்டரிதவணின்அ ரைசதமானது. 22வது ஓவரில் கோலி டுமினி பந்தை லாங் ஆனில் தள்ளி விட்டு தனது 46வது அரைசதத்தைஎடுத்தார்63பந்துகளில் பவுண்டரிகளுடன் 76 ரன்கள் எடுத்த தவண் கடைசியில் டுமினி பந்தில் மார்க்ரமிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

25 ஓவர்களில் 150/2 என்ற நிலையில் கோலி 63 ரன்களில் இருந்தார் ரஹானே11 ரன்கள்எடுத்து மார்க்ரமின் சாதுரிய கேப்டன்சிக்கு டுமினி பந்தை லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பாண்டியா இறங்கினார் சரியாகவே ஆடவில்லை, டுமினியை ஒரு சிக்ஸ் அடித்தார் பாண்டியா. மற்றபடி தடவல் இன்னிங்ஸை ஆடினார். கடைசியில் கிறிஸ் மோரிஸ் பந்தை காலை நகர்த்தாமல் ஸ்லாஷ் செய்ய எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது இந்திய அணி 33 ஓவர்களில் 188/4 என்று இருந்தது, கோலி 100 பந்துகளில் 82 என்று இருந்தார்.

தோனி இறங்கி ஷாட் ஆடத் திணறினார், 22 பந்துகளில் 10 ரன்கள் என்று ஆமையாகியதால் எதிர்முனையில் கோலியின் ரிதம் கெட்டுப்போனது, 19 பந்துகளில் 7 ரன்களில் தோனி தடவிக்கொண்டிருந்த போது, டுமினி பந்தை ஷார்ட் பைன் லெக்கில் தட்டி விட்டு 2 ரன்களை வேகமாக எடுத்து கோலி தனது 34வது சதத்தை எடுத்தார்.

பிறகு அதனைக் கொண்டாடும் விதமாக மிக அருமையாக இடைவெளியைக் கண்டுபிடித்து அதே ஓவரில் மிட்விக்கெட்டில் பவுண்டரி விளாசினார். 42வது ஓவரில் 22 பந்துகளில் 10 ரன்கள் தட்டுத்தடவல் இன்னிங்ஸுக்குப் பிறகு தோனி இம்ரான் தாஹிர் பந்தில் லாங் ஆனில் படுமோசமான ஷாட்டில் அவுட் ஆகி வெளியேறினார்.

தென் ஆப்பிரிக்கா 20வது ஓவரிலிருந்து 40வது ஓவர் வரை 105 ரன்களையே விட்டு கொடுத்தனர். கடைசி 10 ஓவர்களில் 83 ரன்களை எடுக்க கோலியின் அபார இன்னிங்ஸும் புவனேஷ்வர் குமாரின் 16 ரன்களும் உதவின, மற்றபடி தன்னந்தனியாக இந்த பெரிய ஸ்கோருக்கு விராட் கோலி காரணமாக இருந்துள்ளார், ஜாதவ் 1 ரன்னில் பெலுக்வயோ பந்தை மிக அசிங்கமாக விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கடைசி ஓவரை ரபாடா வீச கோலி மிட்விக்கெட்டில் ஒரு திகைப்பூட்டும் சிக்ஸ் மற்றும் மிட் ஆஃபைத் தாண்டி ஒரு கிளாசிக் ட்ரைவ் பவுண்டரி என்று முடித்தார், இந்திய அணியும் ஒரு நேரத்தில் எட்டாக்கனியாக இருந்த 300 ரன்களைக் கடந்து 303/6 என்று முடிந்தது.

போராளி விராட்கோலி 159 பந்துகளில் 12 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 160 நாட் அவுட்டாகத்திகழ்ந்தார்டாஸ்ரிப்போர்ட்மோர்கெல் இல்லை லுங்கி இங்கிடி அணியில்: இந்தியா பேட்டிங்!கேப்டவுன் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் மார்க்ரம் முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைத்துள்ளார்.

இந்திய அணியில் மாற்றமில்லை ஆனால் தென் ஆப்பிரிக்க அணியில் டிகாக்குக்குப் பதில் கிளாசன் களமிறங்குகிறார், மோர்கெல் இல்லைலுங்கி இங்கிடிமுதல் ஒருநாள்போட்டியில் களமிறங்குகிறார் ஆண்டில் பெலுக்வயோ மீண்டும் அணிக்குத்திரும்பியுள்ளார்.

விராட் கோலி டாஸ் பற்றி கூறும்போது, “நாங்களும் முதலில் பேட் செய்யவே முடிவெடுத்திருப்போம இரவில் பந்துகள் ஸ்விங் ஆகும் என்று எதிர்பார்க்கிறேன் அவர்கள் பேட்டிங் ஒரு குறிப்பிட்ட இலக்கை துரத்த வேண்டும் என்று விரும்புகிறோம், ஏனெனில் அவர்களின் நடுவரிசை வலுவானதாக இல்லை. பிட்ச் போகப்போக ‘ட்ரை’ ஆகும்” என்றார்.

Comments

Popular posts from this blog

விக்கெட் கீப்பிங்கில் 400 விக்கெட்டுகள் விழ்த்தி டோனி சாதனை video

கோலிக்கு சவால் விடும் பாக்கிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்!

கோலிக்கு சவால் விடும் பாக்கிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்!