மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராகிறார் லசித் மலிங்கா
இந்த ஏலத்தில் பல முன்னணி வீரர்களை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. அந்த வகையில் இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்காவை எந்த அணியும் ஏலம் எடுக்க முன்வரவில்லை கடந்த 2009-ம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிவரும் அவரை எடுக்காததால் மும்பை அணியின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் அவரது ஐ.பி.எல். வாழ்க்கை முடிந்துவிட்டதாவே கருதப்பட்டது.
இந்நிலையில்லசித்மலிங்காமும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராகநியமிக்கப்பட்டுள்ளார்அவர்மும்பைஅணிக்காக 110 போட்டிகளில் விளையாடியுள்ளார் மேலும் ஐ.பி.எல். தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையும் அவரையே சேரும். அவர் இதுவரை 149 விக்கெட்கள் எடுத்துள்ளார்.
இதுகுறித்து மலிங்கா கூறுகையில்மும்பைஇந்தியன்ஸ்அணியுடன்மீண்டும் இணைந்து கொள்ள சிறப்பான வாய்ப்புகிடைத்துள்ளது கடந்த 10 ஆண்டுகளாக மும்பை எனது இரண்டாவது வீடாக இருந்து வந்தது ஒரு வீரராக, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பயணம் செய்துவந்தேன். இப்போது பந்துவீச்சு ஆலோசகராக தொடர உள்ள புதிய பயணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன், என்றார்.
மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராக மகிலா ஜெயவர்தனேவும், பந்துவீச்சு பயிற்சியாளராக ஷேன் பாண்ட்டும், பேட்டிங் பயிற்சியாளாராக ராபின் சிங்கும், பீல்டிங் பயிற்சியாளராக ஜேம்ஸ் பெம்மெட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்மு ம்பைஅணியின்தலைமை ஆலோசகராக முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment