இலங்கை தமிழர்களை அச்சுறுத்திய இராணுவ அதிகாரியின் சேவையை இரத்து செய்யுமாறு அறிவித்தல்

லண்டனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த இலங்கை உயர்ஸ்தானிராலயத்தைச் சேர்ந்த இராணுவ அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்இலங்கையின் சுதந்திர தினத்தன்று, லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்னால் அங்குள்ள இலங்கைத் தமிழர்களினால் குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதன்போது உயர்ஸ்தானிகராலயத்தைச் சேர்ந்த ப்ரிகேடியர் ப்ரயங்க பெர்ணான்டோ என்ற இராணுவ அதிகாரி இந்த அச்சறுத்தலை விடுத்துள்ளார்அவர் அச்சுறுத்தல் விடுக்கும்வகையில்சைகைசெய்யும்காணொளி காட்சிகள் பல சமூக இணையதளங்களில் வெளியாகி வருகின்றன.<

இது குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தைச் சேர்ந்த தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக்குழு உறுப்பினர்களான ஜோன் ரயன் மற்றும் சிஹோப்ஹெய்ன் மெக்டொனாஹ் ஆகியோர் பிரித்தானிய வெளிவிவகார செயலாளரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.

இராஜதந்திரி ஒருவர் பிரிதொரு நாட்டில் இந்த வகையில் செயற்படுவதுஏற்றுக்கொள்ளப்படக்கூடியவிடயம்அல்லஎனவும் அவர்கள் கண்டித்துள்ளனர்இ ந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடையவர் என குற்றம் சுமத்தப்படும் பிரிகேடியர் ப்ரியங்க பெர்ணான்டோ உடனடியாக நாடுகடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

அத்துடன் அவருக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர சலுகைகள் அனைத்தையும் மீளப்பெற உரியநடவடிக்கைஎடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்இதேவேளை குறித்த அதிகாரியின் சேவையை உடனடியாக இரத்து செய்யுமாறு லண்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வெளிவிகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இது குறித்த அறிவிப்புவெளியிடப்பட்டுள்ளது இதனுடன் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

விக்கெட் கீப்பிங்கில் 400 விக்கெட்டுகள் விழ்த்தி டோனி சாதனை video

கோலிக்கு சவால் விடும் பாக்கிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்!

கோலிக்கு சவால் விடும் பாக்கிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்!