தென்ஆப்பிரிக்காவிற்கு அடுத்த பேரிடி: டி காக்கும் காயத்தால் விலகல்
இந்தியா தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் போட்டி முடிவடைந்ததையடுத்து 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 1-ந்தேதி டர்பனில் நடைபெற்ற.
போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நேற்று செஞ்சூரியனில் நடைபெற்ற 2-வது போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 118 ரன்னில் சுருண்டதுதொடக்க பேட்ஸ்மேனும் விக்கெட் கீப்பரும் ஆனடிகாக் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
நேற்றைய போட்டியின்போது பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது குயின்டான் டி காக்கின் இடது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது.
இந்த காயம் குணமடைய இரண்டு முதல் நான்கு வாரங்கள் ஆகும் என்பதால், இந்தியாவிற்கு எதிரான எஞ்சிய ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடரில் இருந்து குயின்டான் டி காக் விலகியுள்ளார்.
ஏற்கனவே டி வில்லியர்ஸ், டு பிளிசிஸ் ஆகியோர் காயத்தால் விளையாடாமல் உள்ளனர் இந்நிலையில் குயின்டான் டி காக்கின் காயம் தென்ஆப்பிரிக்கா அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக உள்ளது.
காயத்தால் முதல் மூன்று ஒருநாள் போட்டியில் டி வில்லியர்ஸ் பங்கேற்கவில்லைமுதல் போட்டியில் விளையாடிய டு பிளிசிஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்தியாவிற்குஎதிரானடெஸ்ட்மற்றும்ஒருநாள்போட்டியில்டிகாக் குறிப்பிடத்தகுந்தவகையில்விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

Comments
Post a Comment