வெறும் 2 ரன்னுக்கு இப்படியா? நடுவரை கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் வெற்றிக்கு 2 ஓட்டங்களே எடுக்க இருந்த நிலையில், நடுவர்கள் உணவு இடைவெளை என அறிவித்தது, சமூக வலைதளங்களில் கேலிக்குரிய விடயமாக மாறியுள்ளது.
செஞ்சூரியனில் நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயித்த 119 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி, இந்திய அணி சென்று கொண்டிருந்தது.
இந்தியாவின் வெற்றிக்கு 2 ஓட்டங்களே எடுக்க வேண்டிய நிலையில், களநடுவர்கள் உணவு இடைவேளை என அறிவித்தனர். நடுவர்களின் இந்த முடிவு துடுப்பாட்ட வீரர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த விடயம் சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. மேலும், கிரிக்கெட் பிரபலங்களும் இது குறித்து, தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவின் முன்னாள் வீரர் சேவாக் கூறுகையில், ‘இந்திய துடுப்பாட்ட வீரர்களை நடுவர், வங்கி ஊழியர்கள் நடத்துவது போல நடத்தியிருக்கிறார்கள். சாப்பிட்டு விட்டு வாங்க என்று கூறியிருக்கிறார்கள்’ என தெரிவித்துள்ளார்.
மற்றொரு முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா, ‘என்னது 2 ஓட்டங்கள் எடுக்க இடைவேளையா?. கிரிக்கெட்டுக்கு கிரிக்கெட் தான் எதிரி’ என தெரிவித்துள்ளார்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங், ‘ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியில் சுற்றும் திட்டம் எல்லாம் மோசமாக போய் விட்டது’ என தெரிவித்துள்ளார்.






Comments

Popular posts from this blog

விக்கெட் கீப்பிங்கில் 400 விக்கெட்டுகள் விழ்த்தி டோனி சாதனை video

கோலிக்கு சவால் விடும் பாக்கிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்!

கோலிக்கு சவால் விடும் பாக்கிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்!