வெறும் 2 ரன்னுக்கு இப்படியா நடுவரை கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள் video
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் வெற்றிக்கு 2 ஓட்டங்களே எடுக்க இருந்த நிலையில், நடுவர்கள் உணவு இடைவெளை என அறிவித்தது, சமூக வலைதளங்களில் கேலிக்குரிய விடயமாக மாறியுள்ளது.
செஞ்சூரியனில் நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயித்த 119 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி, இந்திய அணி சென்று கொண்டிருந்தது.
இந்தியாவின் வெற்றிக்கு 2 ஓட்டங்களே எடுக்க வேண்டிய நிலையில், களநடுவர்கள் உணவு இடைவேளை என அறிவித்தனர். நடுவர்களின் இந்த முடிவு துடுப்பாட்ட வீரர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த விடயம் சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. மேலும், கிரிக்கெட் பிரபலங்களும் இது குறித்து, தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் முன்னாள் வீரர் சேவாக் கூறுகையில், ‘இந்திய துடுப்பாட்ட வீரர்களை நடுவர், வங்கி ஊழியர்கள் நடத்துவது போல நடத்தியிருக்கிறார்கள். சாப்பிட்டு விட்டு வாங்க என்று கூறியிருக்கிறார்கள்’ என தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment