இந்திய சுழல் சூறாவளியில் 118/10 சுருண்ட தென் ஆப்ரிக்கா: மகா மட்டமான ஸ்கோரை பதிவு செய்தது video
செஞ்சுரியன்: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 118 ரன்களுக்கு சுருண்ட து தென் ஆப்ரிக்க சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணிமுதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது இத்தொடரை இந்திய அணி 2-1 என கோட்டைவிட்டது.
இந்நிலையில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக 6 ஒருநாள் 3 டி-20 போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கிறது முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்றது.
இந்நிலையில் இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி செஞ்சுரியனில் நடக்கிறது இதில்டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.
சகால் கலக்கல்இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு ஆம்லா 23, டி காக் 20 நிலைக்கவில்லை தொடர்ந்து வந்த மார்க்ராம்8 டுமினி 25 மில்லர் 0 ஜோண்டோ 25 மோரிஸ் 1 என அடுத்ததடுத்து பெவிலியன் திரும்பினர்.
பின் வரிசை வீரர்களும் ஒற்றை இலக்க ரன்னை தாண்டவில்லைஇதையடுத்து தென் ஆப்ரிக்க அணி 32.2 ஓவரில் 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்திய அணி சார்பில் சகால் அதிகபட்சமாக 5 விக்கெட் கைப்பற்றினார்.

Comments
Post a Comment